உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளத்தில் படகு வசதி.பொள்ளாச்சியிலும் ஹாட்ஏர் பலூன் திருவிழா.
04.12.21:
கோவையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி குள பணிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். கோவை வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரியகுளத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் மாநகராட்சி ஆணையரிடமும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசும்போது, கோவை உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளத்தில் படகு வசதி செய்து தருகிறோம் என அறிவித்திருக்கிறோம் எனவும் இரண்டு குளங்களிலும் படகு வசதிக்கான சாத்திய கூறுகள் என்னென்ன உள்ளன என்பதை ஆய்வு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் 75 சதவீதம் நிறைவுற்ற நிலையில் 25 சதவீதம் பணிகள் ஒமிக்ரான் தொற்று பரவலால் நிலுவையில் உள்ளதென கூறினார். வைரஸ் தொற்று குறைந்ததும் சுற்றுலா துறையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளபடும் என கூறினார்.
சுற்றுலா துறைக்கென முதலமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் தனி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.தமிழ்நாடு மற்றும் உள்ளூர் சுற்றுலா துறையை மேம்படுத்த வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.மேலும் தமிழ்நாடு ஹோட்டல்களில் புதுப்பிக்க பணிகள் நடைபற்று வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாத்துறையில் வருவாயை இழந்திருப்பதாக தெரிவித்த அவர்
தமிழ்நாடு ஹோட்டல்களில் சொமேட்டோ,சுவிக்கி போன்று ஆன்லைன் இணையதளங்கள் மூலம் உணவு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாலும் ஆன்லைன் மூலம் தமிழ்நாடு ஹோட்டல்களில் புக் செய்யும் வசதிகளால்22 லட்சம் வருவாய் வந்துள்ளதாக தெரிவித்தார்.
மெக்சிகோ நாட்டில் நடந்த ஹாட்டர் பலூன் திருவிழாவை போன்று பொள்ளாச்சியிலும் ஹாட்ஏர் பலூன் திருவிழா கூடிய விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.