அக்ரி இன்டெக்ஸ் 2022 வேளாண் கண்காட்சி.கோவை கொடிசியா.
கோவை 15.07.22:
click for agri intex 2022 video
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், கொடிசியா மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து, கோவை கொடிசியா அரங்கில், அக்ரி இன்டெக்ஸ் 2022 கண்காட்சி,ஜூலை 15 அன்று துவங்கியது. இந்த கண்காட்சியை வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார். ஜூலை 18ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விவசாய கண்காட்சியில், 497 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயத் துறைக்கு தேவையான அடிப்படை தேவை முதல் நவீன வேளாண்மை கருவிகள் முதல் அனைத்து நிறுவனங்களும், இந்த கண்காட்சியில் அரங்கங்கள் அமைத்துள்ளன. விதைகள், உரங்கள், மருந்து தெளிப்பான்கள், இயற்கை விவசாயம் முறைகள், சொட்டு நீர் பாசனம் முறைகள், தானியங்கி நீர் பாசன நுணுக்கங்கள் நவீன விவசாய கருவிகள், ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் ,ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ,மாடு வளர்ப்பு முறைகள் என விவசாயத்தில் உள்ள அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் இங்கே அரங்குகள் அமைத்துள்ளன.
காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை பார்வையிட, விவசாயிகளுக்கு அனுமதி இலவசம். இக்கண்காட்சியை காண வரும் பொது மக்களுக்கு,50 ரூபாய் கட்டண வசூலிக்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில், விவசாயத்துறையில் வேளாண் கல்லூரியின் பங்களிப்பு என்ன என்பதை விளக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன .விவசாயப் பணிகளுக்கு, இன்று ஆள் பற்றாக்குறையால் இத்துறையில் இயந்திரங்கள் இன்றி அமையாது ஆகியுள்ளது. இதற்காக திறந்த வெளியில் வேளாண் துறைக்கு பயன்படும் இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.