ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் விழிப்புணர்வு.
click for live video
கோவை 27.07.22:
கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, 60லட்சம் மதிப்பிலான 106 செல்போன்கள் கண்டுபிடித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 350 செல்போன்களை கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார்.மாதம் 100 செல்போன்களை ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
போக்ஸோ வழக்குகளை பொறுத்தவரை ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 149 வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் ,60 வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், ஒன்பது வழக்குகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளோம் என கூறினார்.குழந்தைகளுக்கான குற்றத்தை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். குற்ற பத்திரிக்கை மூலம் குற்றவாளிகளுக்குரிய தண்டனை கிடைக்குமா என்பதை ஆய்வு செய்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பள்ளிக்கூடம் ப்ராஜெக்ட் மூலம் 28 நாட்களாக பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் இதுவரை 36 ஆயிரம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 10 வயது கீழ் உள்ள 12000 குழந்தைகளை சந்தித்துள்ளதாகவும்,தொடர்ந்து இந்த செயல் நடைபெறும் என கூறினார். இந்த ப்ராஜெக்ட் மூலம் இரண்டு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மாணவர்கள் மத்தியில் பான் மசாலா குட்கா போன்ற போதைப் பொருட்களை தடுக்கும் வகையில் 347 குற்றவாளிகளை கைது செய்து 332 வழக்குகள் பதிவு செய்து 3 அரை டன் குட்கா பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறினார்.பெட்டிக்கடைகளில் பான்மசாலா விற்பனை அதிகரிப்பதை தடுக்க 125 கடைகள் மீது நடவடிக்கை எடுத்து ஐந்து கடைகளுக்கு சீல் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கஞ்சாவை பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் முதல் 126 வழக்குகள் பதிவு செய்து 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15க்குள் இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் தெரிவித்தார்.
வலி நிவாரணி மருந்துகளை போதைக்கு பயன்படுத்துவது தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், மருத்துவர் சீட்டு இல்லாமல் யாருக்கும் வலி நிவாரணி மருந்துகளை மெடிக்கல்களில் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார்.
கிரைம் வழக்குகளைப் பொறுத்தவரை ஏப்ரல் முதல் 311 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் எனவும் மொத்தம் 1 கோடியே 51 லட்சத்து 8 ஆயிரத்து 380 மதிப்புள்ளவற்றை பறிமுதல் செய்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
மாவட்டம் முழுதும் பத்தாயிரம் கேமராக்கள் உள்ளது. தொடர்ந்து கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
கோவிட்டுக்கு முன் இருந்ததை விட விபத்துக்கள் -10 % ஆக மாறி உள்ளது.
387 விபத்துகள் நடந்துள்ளதாகவும் கடந்த 5 ஆண்டில் இரண்டு விபத்துக்கு மேல் ஏற்படுத்தியவர்களை கண்காணித்து 714 வண்டிகளை அடையாளம் கண்டு 286 கனரக வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளோம் எனவும் கூறினார். அதேபோல வாகன உரிமத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
பல்வேறு இடங்களில் குறிப்பாக துடியலூர் கவுண்டம்பாளையம் பகுதிகளில் திருநங்கைகள் குறித்து பல்வேறு புகார்கள் வருவதாக தெரிவித்தார். அவர்களை அழைத்து ஆலோசனை வழங்கியதாகவும், அவர்களுக்கு சோசியல் வெல்பேர் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். அட்டுக்கல் பிரச்சனையை பொறுத்தவரை அங்குள்ள போராட்டக்காரர்களிடம் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு தாசில்தார் மூலம் புகார் பெற்று சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.