ஆபரண நகை செய்ய நகை பட்டறை உரிமையாளரிடம் ரூ. 30 லட்சம் தங்கக் கட்டி வாங்கி மோசடி. தம்பதிகள் மீது வழக்கு.
கோவை. அக்டோபர். 26-
கோவையில் ஆபரண தங்கம் நகை செய்து தருவதாக நகை பட்டறை உரிமையாளரிடம் ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டி வாங்கி மோசடி செய்த தம்பதியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெரைஹால் ரோடு, தாமஸ் தெருவை சேர்ந்தவர் மதன்குமார் 40, நகை பட்டறை நடத்தி வருகிறார்கள். இவர் தங்க கட்டிகளை வெளியில் கொடுத்து செயின், கம்மல், மோதிரம், போன்ற ஆபரணங்களை செய்து விற்பனை செய்து வருகிறார்.
இவர் வரைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் வரைட்டி ஹால் ரோடு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் அவரது மனைவி என்னிடம் கடந்த 9. 10. 2017 முதல் 11. 10. 2017- ஆம் ஆண்டு வரை தங்கச் செயின் வடிவமைத்து தருவதாக ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான 939. 023 கிராம் தங்க கட்டிகளை வாங்கினர்.
ஆனால் அவர்கள் திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து கேட்டால் உரிய பதில் இல்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் ஹரிஹரன் அவரது மனைவி பிரியதர்ஷினி மீது ஏமாற்றுதல் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.