கோவை போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலில் போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் முன்னிலையில் அலுவலர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளது, அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவையுடன் ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், எனவும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்பொழுதும் உயர்ந்த நோக்குடன் ஊழல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கண்ணியத்துடன், ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்கவேண்டும் என்பதை முன்னிறுத்தி கோபாலபுரம் பகுதியில் உள்ள ஆணையாளர் அலுவலகத்தில் ஆணையாளர் தீபக் எம் தாமோர்,

துணை ஆணையர் உமா முன்னிலையில், ஆணையாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து துறை சார்ந்த பணியாளர்களும் இன்று ஆணையாளர் அலுவலகத்தில் ஆணையாளர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்அதில், அனைத்து செயல்களிலும் நேர்மையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும்,

அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வுகளை உரிய அதிகார மையத்திற்கு தெரியப்படுத்துவேன் என்று நான் மனமார உறுதி அளிக்கிறேன் என்று

அனைத்து பணியாளர்களும் இன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *