Aanmeegam

நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை கோவை சுண்டக்கா முத்தூர் ரோட்டில் உள்ள கலைகூடத்தில் விற்பனைக்காக குவிக்கபட்டுள்ள பொம்மைகளை பெண்கள் தேர்வு செய்து வாங்கிறாா்கள்

கடவுளை வீட்டுக்கு அழைத்து வந்து நவராத்திரி என்னும் ஆன்மீக விழாவாக மக்கள் கொண்டாடும் செயல் காலங்காலமாக நடக்கிறது இறைவனின் ஆட்சி வீட்டுக்குள் நடப்பது போல இருக்கும் .

இது கொலுக்கு மட்டுமல்ல பொம்மை கலைஞர்களின் வாழ்வின் முக்கிய நிகழ்வு இந்த நாளில் மட்டும் தான் பொம்மை வாங்கி பயன்படுத்தபடுபவர்கள் இதன் மூலம் வணிக வளர்ச்சி இருக்கும் என்பதும் உண்மை

நம் நாட்டுப் பொம்மைகளைப்பற்றியும் ஒரு சின்னப்பார்வை பார்த்துவிடலாம்.

சமீபகாலமாக இறக்குமதியான சீன பொம்மைகளும், பார்பி மற்றும் ஜியஜோ பொம்மைகளைத்தான் இந்தத்தலைமுறை அறிந்தாலும், மரத்தினால் ஆன சொப்பு , களிமண் , தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, மாவினால் செய்த கல் சமையல் செட்டு, மரபாச்சி பொம்மைகள்…

இவற்றை நாம் மறக்கமுடியாது மறக்கவும் கூடாது. பிறந்த குழந்தைக்கு மரப்பாச்சுவை இழைத்து தாய்ப்பாலுடன் கொடுத்தது ஒரு காலம். வீட்டில் கடவுளின் பொம்மை ஒன்றை வைத்தால் தீமை நெருங்காது என்றும் நம்பிக்கை. நம்பிக்கைகள் இன்றும் இருக்கின்றன….

ஆண்டு தோறும் கொண்டாடும் நவராத்திரி விழாவில் இந்த வருடம் வந்துள்ள கதை சொல்லி பொம்மைகளில் பசுமையான சின்ன வயசுக்கு அழைத்து செல்கிறது இறைவனில் தொடங்கி அத்தனை படைப்புகளில் ஓரு உயிர்ச்சூழல் உணர்வு வெளிப்படுகிறது..

கோவை சுண்டக்கா முத்தூர் ரோட்டில் உள்ள கலைகூடத்தில் விற்பனைக்காக குவிக்கபட்டுள்ள பொம்மைகளை பெண்கள் தேர்வு செய்து வாங்கிறாா்கள்