திமுக தேர்தல் வாக்குறுதியின்படியே கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை 22.01.22:
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று சிகிச்சைக்கான படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இன்று புதிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். மேலும் ரோட்டரி கிளப் சார்பில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள, நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் கான்சண்டேட்டர் இயந்திரத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கடந்த 72 மணி நேரத்தில் 200 கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 28 படுகைகள் ஆக்ஸிஜன் செரிவூட்டிகளை கொண்டதாக உள்ளதாகவும் தெரிவித்தார். மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றதாக தெரிவித்தார்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக்வும், அதன்படி கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது வேட்பு மனுவில் தங்களது சொத்து மதிப்பை முன்னாள் அமைச்சர்கள் காட்டியதாகவும் ,ஆனால் தற்போது 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.இதற்கு இடையே உள்ள வித்தியாசம் எப்படி வந்தது என கேள்வி எழுப்பினார். கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் ஆலோசனை செய்வதாகவும் அதன்படி முடிவு வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.