காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்களை மாவட்ட கலெக்டர் சமீரன் சற்றுமுன் ஆய்வு செய்தார்.
கோவை. அக்டோபர். 7 –
தமிழகம் உட்பட கோவை முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் படிப்படியாக முதலில் கல்லூரி, இரண்டாவதாக ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு என பள்ளிகள் திறக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் அடுத்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதான வளாகத்தில் மாவட்ட கலெக்டரின் தலைமையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முன்னிலையில் கோவை மாநகருக்கு உட்பட்ட தனியார் பள்ளி வேன்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அப்பொழுது வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளனவா? பிரேக், பாதுகாப்பு உபகரணங்கள், குழந்தைகள் அமரக்கூடிய சீட்டுகள், உட்பட பல்வேறு விதமான பாதுகாப்பு நலன் குறித்த ஆய்வுகளை கலெக்டர் மேற்கொண்டார்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களை அழைத்து செல்லும் வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு, அனுமதி சீட்டு பெற்ற பள்ளி, கல்லூரி வாகனங்களின் மீது பள்ளி, கல்லூரி வாகனம் என எழுதப்பட வேண்டும். வா டகை வாகனங்கள் இயங்கும் பட்சத்தில் பள்ளி, கல்லூரி பணிக்காக மட்டும் என எழுதப்பட்டிருக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட இருக்கைகளுக்கு மேல் பள்ளி குழந்தைகளை ஏற்ற கூடாது. முதல் உதவி பெட்டி கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தீயணைப்பான் கருவிகள் வைக்கப்பட வேண்டும். வாகனத்தில் அந்தந்த பள்ளி, கல்லூரியின் டெலிபோன் எண்கள் எழுதப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்கள் கனகர ஓட்டுநர் உரிமம் பெற்று அதில் குறைந்தது பத்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மே லும் அந்த ஓட்டுநர் போக்குவரத்து குற்றங்களுக்காக இர ண்டு முறைக்கு மேல் தண்ட னை பெற்றவராக இருக்க கூடாது. வாகனத்தில் பாதுகாப்பு கிரில் பொருத்தப்பட வேண்டும். ஓட்டுநர் தவிர மற்றொரு உதவியாளரை நியமிக்க வேண்டும். வாகனம் மஞ்சள் வண்ணம் பூச வேண்டும். ஆசிரியர் நிலையில் ஒருவர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
ஏவிடி படிவத்தில் ஓட்டுநர் புகைப்படம் ஓட்டப்பட்டு அதை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியின் சான்றொப்பம் பெறப்பட்டு அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரால் மேலொப்பம் இடப்படவேண்டம். கலர் ஜெராக்ஸ் காப்பி அனைவரின் பார்வையில் படும்படி வாகனத்தின் உட்பகுதியில் வைக்க வேண்டும். இப்படிவம் ஒவ்வொரு கல்வி ஆண்டு துவக்கத்திலும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
வாகனங்களை நிறுத்துவதற்கென தனியாக ஒரு இடத்தை ஒதுக்கித் தரவேண்டும். பள்ளி, கல்லூரி அருகே வேகத்தடை அமைத்து பள்ளி எல்லை வேகம் குறைக்கவும் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ள அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரி களுக்கும் கலெக்டர் உத்தரவிட்டார்.