தமிழக அரசின் கோவில் நகை உருக்கும் திட்டத்தை கண்டித்து இந்துமுன்னணியின் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்ம் நடைபெற்றது.
கோவை மாநகரில் காந்திபுரம் முனியப்பன் கோவில் அருகில் நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் J.S.கிஷோர் குமார் தலைமை வகித்தார்.
அவர் கூறியதாவது:-
நமது முன்னோர்கள் கட்டிய கோவிலுக்கென்று பல் வேறு சொத்துகளும் நகைகளும் உள்ளன.
அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட பிறகு
பல ஏக்கர் கோவில் நிலங்கள் கொள்ளை போனது.பக்தர்கள் வழிபடவே சிறப்பு தரிசன கட்டணத்தை அமுல்படுத்தியது பக்தர்களை கோபப் படுத்தியது.
கோவில்களை விட்டு அறநிலைய துறை வெளியேற வேண்டுமென்று இந்துமுன்னணி தொடர்ந்து போராடி வருகிறது.இந்த சூழ்நிலையில் கோவிலில் உள்ள தங்க நகைகளை எடுத்து உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இந்துக்களை கொதிப்படையச் செய்துள்ளது.இதை திரும்ப பெற வேண்டுமென இந்துமுன்னணி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது என்றார்.
மாவட்ட தலைவர் K.தசரதன் முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் S.சதிஷ் கோட்ட பேச்சாளர் ஆ.கிருஷ்ணன் மாவட்ட பொது செயலாளர் M.ஜெய்சங்கர் ஆகியோர் உரையாற்றினர்.
மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் மாவட்ட செயலாளர்கள் ஆறுச்சாமி. ஆனந்த். மகேஸ்வரன். ரமேஷ் . மாவட்ட செயற்குழு ஜெயபாலன் மற்றும் மாவட்ட நகர கிளை பொறூப்பாளர்கள் உட்பட 1500 பேர் கலந்து கொண்டனர்.