அனைவரின் நோக்கங்கள் ஒன்றே ஒன்றுதான்.

வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்று

அதற்குமுன் உங்களை எப்படி ஊக்கப் படுத்துவது.

எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்பதை கற்றுக் கொள்ளுங்கள்…!!

வாழ்க்கையில் நீங்கள் கடந்துசெல்லும் வலி போராட்டங்கள் கஷ்டங்கள் அனைத்துமே.

எந்த சந்தேகமுமின்றி உங்களை வலிமையானவராக மாற்றும். எதையும் எதிர்கொள்ள பழகுங்கள்…!

உங்கள் வெற்றிப்பாதையில் வேகம் முக்கியமானதல்ல,  அதில் பின்வாங்குதல் இல்லாமல் இருப்பதே முக்கியம்.

பயமும், தயக்கமும் இருக்கும் வரை தோல்வி துரத்திக்கொண்டே தான் இருக்கும். அவைகளை கிள்ளி எறியுங்கள்.

புயலால் புல்லை வளைக்கத்தான் முடியும் ஒடிக்க முடியாது… துயர்கண்டு துவண்டு விடாதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே.

எத்தனையோ வலிகளைக் கடந்த வாழ்க்கை தான் பிரகாசமான வழிகளை பெற்று சிகரம் தொட்டுள்ளது.

காலம் உங்கள் கையில். கவனத்தோடும், துணிவோடும் செயல்பட்டு வெற்றி காணுங்கள்.

யாரவது வந்து உங்களை உயரத்தில் வைப்பார்கள் என்று காத்திருக்காதீர்கள்.. நீங்கள் தன்னந்தனியாக தான் உயரத்திற்கு வந்து சேர வேண்டும்..

மற்றவரை #வீழ்த்துவதோ, #தாழ்த்துவதோ நமது வாழ்க்கையின் #நோக்கமாக இருக்க கூடாது…..

நாமும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்றுவது தான் நமது வாழ்க்கையின் #நோக்கமாக_லட்சியமாக இருக்கவேண்டும்…..

உயரத்தில் இருந்து பார்த்தால் மற்றவர்கள் சிறியவர்களாக உனக்கு தெரியலாம்…
ஆனால், நீயும் அவர்களில் ஒருத்தன் தான் என்பதை மறந்து விடாதே.. …!!!!

அவமானப் படுத்தியவர்களுக்கு #வார்த்தையில் பதில் சொல்லாதீர்கள்…..

உங்கள் வாழ்க்கையை பதிலாக சொல்லுங்க…
உங்கள் தலை நிமிர நிமிர அவர்கள் தலை குனிந்தே தீருவார்கள் ….

#பூக்களாக இருக்காதீர்கள் #வீழ்ந்து விடுவீர்கள் அல்லது #பறிக்க படுவீர் ….

#செடிகளாக இருங்கள், அப்போது தான் பூத்துக்கொண்டே இருப்பீர்கள்….!!!!
null

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *