காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருடன் இணைந்து கூட்டுச் சோதனை
கோவை 19.07.2022:
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், குட்கா விற்பனையில் முதல் முறை ஈடுபட்டால் ரூ.5000/-அபராதமும், இரண்டாவது முறை விற்பனை செய்தால் 10,000/- அபராதமும், அடுத்த முறை விற்பனை செய்யும் போது கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் 19.07.2022, காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருடன் இணைந்து மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் கூட்டுச் சோதனை மேற்கொண்டபோது ,9 பெட்டிக்கடைகளில் முதல் முறை விற்பனையில் ஈடுபட்டதால்
ரூ 5,000/-அபராதம் விதித்து மொத்தம் ரூ 45,000 – ம் அபராதமாக விதித்தும் அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து,அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது இந்த நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்.சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள்.
கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.