கோவை-அவிநாசி சாலை சிக்னலில் கவுண்டவுன் டைமர் வசதி பொருத்தம்.
இளையராஜா இசை.
கோவை 18.07.22
click for live video.
கோவை அவிநாசி சாலையில் லட்சுமி மில் சிக்னல் பகுதியில் பாதசாரிகள் கடக்கும் சிக்னலில் கவுண்டவுன் டைமர் வசதியை மாநகர காவல் ஆணையாளர் v. பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

கோவை மாநகரில் முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்கள் கடந்துச் செல்ல கவுண்டவுன் டைமர்கள் உள்ளது. ஆனால், பாதசாரிகள் சிக்னல்களை கடக்க தனியாக கவுண்டவுன் டைமர்கள் இல்லாததால், இன்னும் சாலையை கடக்க எவ்வளவு நேரம் உள்ளது என்பது தெரியாமல், பாதசாரிகள் பதட்டத்துடன் சாலையை கடக்க வேண்டி உள்ளது.

இந்த நிலையை மாற்ற, மாநகரில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் பாதசாரிகள் கடந்து செல்ல கவுண்டவுன்கள் இணைக்கும் நடவடிக்கையை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார்.இதன் முதல் கட்டமாக, கோவை அவினாசி சாலையில்,ஏற்கனவே இருக்கும் சிக்னல்கள் பழுது பார்க்கப்பட்டு, பாதசாரிகள் கடந்து செல்ல கவுண்டவுன் டைமர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை, காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் லக்ஷ்மி மில்ஸ் சிக்னலில் துவக்கி வைத்தார்.இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, சிக்னலில் ஒலிப் பெருக்கிகள் பொருத்தப்பட்டு, சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் கேட்பதற்காக திரையிசை பாடல்களின் கரோக்கிகள் ஒலிக்கப்படுகிறது.

இதே போல், மாநகர் முழுவதும் உள்ள அனைத்து சிக்னல்களிலும் இந்த நடைமுறை விரைவில் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *