14 . 40 நொடிகளில் 15 மீட்டர்கள் தொலைவுக்கு 118 அம்புகள் எய்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார் விஜயவாடாவைச் சேர்ந்த நான்கே வயதான ஆருஷ் ரெட்டி. இந்திய சாதனை புத்தகம்(Indian Book of Records) மற்றும் ஆசிய சாதனை புத்தகம்(Asian Book of Records) ஆகியவற்றின் தீர்ப்பாளரான பிஸ்வதீப் ராய் சவுத்ரி முன்னிலையில் இந்தச் சாதனை வால்கா வில்வித்தை அகாடெமியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

‘நிகழ்வில் ஆருஷ் ரெட்டியின் திறமையைப் பார்த்தபோது அவன் 100 அம்புகள் வரை எய்யக்கூடும் என்று தான் கணித்தேன். ஆனால் அவன் 14 . 40 நொடிகளில் 15 மீட்டர்கள் தொலைவுக்கு 118 அம்புகள் எய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான். இது அதிக அளவுக்கு ஊக்கத்தைத் தருகிறது மேலும் மிகவும் பாராட்டத்தக்கது’ என்று இந்திய சாதனை புத்தகத்தின் சார்பாக சான்றிதழை வழங்கிய பிஸ்வதீப் தெரிவித்தார்.

‘எட்டு மாதங்களாக ஆருஷ் ரெட்டி அகாடெமியில் பயிற்சி பெற்று வருகிறான். அவனை ஒரு நம்பிக்கையான தொழில்முறை வில்லனாக வளர்ப்பதற்குப் பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன் ‘ என்று வால்கா வில்வித்தை அகாடெமி தலைவர் செருகூரி சத்தியநாராயண தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *