கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு அசத்தினர்.

26.12.21:

சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா மற்றும் ஹந்துஸ்தான் ஸகௌட்ஸ் மற்றும் கைடு அசோசியேஷன் ஆகியோர் இணைந்து 3 வது தேசிய அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டிகள் கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா இந்திய சிலம்ப சங்கத்தின் பொது செயலாளர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.சர்வதேச சிலம்பம் கமிட்டியின் தொழில்நுட்ப இயக்குனர் மாஸ்டர் சந்தோஷ் குமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக,இந்தியன் நான் ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் முகம்மது சிராஜ் அன்சாரி,கிராமத்துப்பால் நிறுவன தலைவர் ஜனார்த்தனன், ஹந்துஸ்தான் ஸகௌட்ஸ் மற்றும் கைடு அசோசியேஷன் கவுன்சில் தலைவர் ஹரிபிரகாஷ்,ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.

போட்டியில் இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.சீனியர், சூப்பர் சீனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் என 4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் தனி மற்றும் குழு போட்டி என போட்டியாளர்கள் சிலம்பம் மற்றும் இரட்டை,ஒற்றை சுருள் என சுற்றி அசத்தினா்.இதில் பெற்றி பெறும் சிறந்த போட்டியாளர்கள் சர்வதேச அளவில் நடைபெற உள்ள போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

சிலம்பாட்ட கலைக்கு மத்திய மாநில அரசுகள் உரிய முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், சிலம்பாட்ட வீரர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பில் 3.5% இட ஒதுக்கீடு செய்துள்ளதற்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் சிலம்ப சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.துவக்க விழாவில் இந்திய சிலம்ப சங்க பல்வேறு நிலை நிர்வாகிகள் முருக கனி,பாஸ்கர்,மாஸ்டர் அர்ஜூன்,பாக்கியராஜ்,பாஞ்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *