நகருக்குள்ளே குறுவனம் அமைத்த தன்னார்வலர்கள்.
11.09.22:
நமது 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசு ‘சுதந்திரத்தின் அமுத பெருவிழாவாக’ நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த தியாகிகளை கொண்டாடுகிறது. இத்தருணத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும்,கோயம்புத்தூர் மாநகராட்சியின் திட்டமான நகரப் பகுதிகளில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில்,100 வார்டுகளிலும் உள்ள ரிசர்வ் சைட்களில் மியாவாக்கி குறுங்காடுகளை உருவாக்கும் திட்டத்தில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ,254 வது வார தொடர் களப்பணியில் 2500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

ZF Wind Power Coimbatore Pvt Ltd நிறுவனத்தின் நிதியுதவியுடன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில் சென்ற மாதம் 4 பொது இடங்களில் 5500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 11அன்று, சுண்டக்காமுத்தூர் பகுதியில் பி&டி காலணி சைட் 1&2 ஆகிய இரு இடங்களில் 2500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இவ்விழாவில்கோவை மாநகராட்சி துணைமேயர் திரு.இரா.வெற்றிச்செல்வன்,89 ஆவது வார்டு உறுப்பினர் திரு. முருகன்,ZF Wind Power Coimbatore Pvt Ltd திரு. உமாகாந்த் மற்றும் அலுவலர்கள்,மேலும் தன்னார்வ அமைப்பிலிருந்து திரு. ரவீந்திரன்-RACC, திரு.மணியன் C4TN, தன்னார்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் இப்பணியினை பாராட்டி, மேற்கொண்டு மரங்களை பாதுகாப்பாக வளர்த்து பராமரிப்பதாக உறுதி கூறினர்.

நகரத்தின் பசுமைப் பரப்பை அதிகரித்து ஆக்சிஜன் உற்பத்தியை இயற்கையாக பெருக்கி நமக்கான பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க தொடர்ந்து பயணிக்கிறோம் என்கிறார் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டன்.

இதயத்தின் ஈரம் கொண்டு…!! புவியின் ஈரம் காப்போம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *