கோவை 16.08.23:

நீட் விவாகரத்தில் ஆளுநர் மீது குற்றம்சாட்டி தொடர்ந்து திமுக அரசு நாடகமாடுவதாகவும் ,நீட் விவாகரத்தில் திமுக பேசுவது அனைத்தும் பொய் என்றும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டினார்.

 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இந்தியாவே வியக்கும் வகையில் அதிமுக மாநாடு இருக்கும் என்றும், இந்த மாநாட்டை பார்த்து பயந்து திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு முதல் கையெழுத்து என்று சொல்லி, மக்களை ஏமாற்றி வாக்கு கேட்டார்கள். ஆனால் நீட் விலக்குகாக நாங்களே பல்வேறு முயற்சிகள் எடுத்துள்ளதாக தெரிவித்த அவர்,திமுக, நீட் விலக்குகாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.அவர்கள் அமைத்த இந்தியா கூட்டணி மூலமாக வலியுறுத்தி அனைவரிடம் கேட்டு, நாடாளுமன்றத்திலாவது குரல் எழுப்பியிருக்கலாம்.எதையும் திமுக செய்யவில்லை எனவும்,நீட் விவாகரத்தில் ஆளுநர் மீது குற்றம்சாட்டி திமுக தொடர்ந்து நாடகமாடுவதாகவும்,
நீட் விவாகரம் தொடர்பாக திமுக பேசுவது எல்லாம் பொய் எனவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

மேலும் காவிரி விவாகரத்தை பொறுத்தவரை நானும் டெல்டா காரன் என்று சொன்னார்.ஸ்டாலின்,ஆனால் கர்நாடக அரசிடம் பேசி காவிரி நீரை பெற்று தராமல் போனதால் பயிர்கள் எல்லாம் கருகி போனதாகவும் அவர் தெரிவித்தார்.

மதுரை மாநாடுக்கு எதிராக வேண்டுமென்ற வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
நாங்கள் அனைத்து அனுமதியும் பெற்றுள்ளதாக தெரிவித்த அவர்,
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், திமுக அரசு மக்களுக்கு என்ன செய்ததது? எனக்கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி,இந்தியாவிலே அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக தான், தமிழகம் உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *