கோவை 20.06.23:
       20 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய வாழ்நாள் சிறைவாசிகளுக்கு  பொது மன்னிப்பு வழங்க வலியுறுத்தி, ஜூலை 9ஆம் தேதி கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம்  நடத்த த.மு.மு.க தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்  சார்பில் ஜூலை 9 கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்  மமக மாநில பொருளாளர் இ. உமர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கோவை மத்திய மாவட்டம், கோவை தெற்கு மாவட்டம், கோவை வடக்கு மாவட்டம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, நீலகிரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் மற்றும் பொருளாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1) இந்த கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையின்படி  வருகின்ற ஜூலை 9 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ,மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கும் கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தினை வீரியமிக்க போராட்டமாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2) தமிழ்நாடு அரசு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற இஸ்லாமிய வாழ்நாள் சிறைவாசிகளுக்கு எந்தவித பாரபட்சமும் இன்றி பொது மன்னிப்பு வழங்கிட வேண்டும்.

3) இஸ்லாமிய வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்திட, தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.
ஆகிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     இதில் மாநில செயலாளர்கள் கோவை அமீது, பழனி பாருக், மாநில தலைமை பிரதிநிதிகள் சாதிக் அலி, கோவை அக்பர், ஹாரூன் ரஷீத், சமூகநீதி மாணவர் இயக்கம் மாநில செயலாளர் அம்ஜத் அலிகான், மாநில செயற்குழு உறுப்பினர் இ. அஹமது கபீர் MC , ரிஸ்வான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *