சென்னையில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கோவை காளப்பட்டியைச் சேர்ந்த ச.இலக்கியா மகளிர் ஜூனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை.
கோவை அக்டோபர் 27 தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை அமைப்பு நடத்திய மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி அக்டோபர் 21 முதல் 24 வரை நான்கு நாட்கள் சென்னை எக்மோர், வெங்கு தெருவில், உள்ள கார்ப்பரேஷன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கோவையைச் சேர்ந்த ஸ்ரீ தர்ம சாஸ்தா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் காளப்பட்டியை சேர்ந்த ச.இலக்கியா. கோவை நேரு நகரில் கோச் திரு.பிரபு நடத்திவரும் YAKK Sports சார்பாக இரண்டு வருட பயிற்சிக்குப் பிறகு முதல் முறையாக குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு உமன் ஜூனியர் 60-63 kg பிரிவில் தனது முதல் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த மாணவி இலக்கியாவை பள்ளியின் தலைவர் திரு M.K.வேலாயுதம் செயலாளர் திரு சந்தோஷ் நாயர் தலைமை ஆசிரியர் திருமதி தனலட்சுமி மற்றும் அனைத்து உறுப்பினர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் மாணவியின் பயிற்றுநர் கோச் பிரபு ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.