கோவை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், கண்காணிப்புக்குழு தலைவரான எம்.பி., நடராஜன் தலைமையில் நடந்தது.
குடிநீர் வடிகால் வாரியம், நில அளவைத்துறை, மாவட்ட வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட தொழில் மையம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, பொது சுகாதாரம், மின் உற்பத்தி பகிர்மானத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கூட்டத்தில் பேசிய எம்.பி., நடராஜன், ”அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் உரிய மதிப்பீட்டின் அடிப்படையில் முறையாக செய்யப்பட வேண்டும். பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,” என்றார்.
கலெக்டர் சமீரன், பொள்ளாச்சி எம்.பி., சண்முக சுந்தரம், எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்