மதுபானக் கடைகளை மக்கள் வேண்டாம் என்று கூறினால் நிறுத்திவிடலாம்- அமைச்சர் செந்தில்பாலாஜி.

கோவை

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் “அனைவருக்கும் வீடு” கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 829 பயனாளிகளுக்கு தலா 2.10 லட்சம் மானியத்துடன் பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகளையும் 11 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
முன்னதாக கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை (ஜூன்12)முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,ஓராண்டு காலத்தில் தமிழகத்தில் 45 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது என கூறிய அவர்,தமிழகத்தில் புதிய கடைகள் இல்லை என்றும் இடமாற்றம் செய்யப்படுகிறது என கூறினார்.அதனை அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று கூறினால் அதனை நிறுத்தி விடலாம் என தெரிவித்தார். மேலும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினால் கோவை மாவட்ட மக்களின் குறைகளை தீர்க்கும் கோவை 24×7 சேவையில் 8,407 அழைப்புகள் வரப்பட்ட நிலையில் 4,637 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள புகார்களுக்கும் தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சேவை தொடர்ந்து செயல்படும். வரக்கூடிய காலங்களில் கோவை மாவட்டத்திற்கு வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை முதல்வர் வழங்க உள்ளதாக தெரிவித்தார். அதேசமயம் இன்றைய தினம் மேலும் 45 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் அரசு உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் துணை மேயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *