கோவை கே. சி. பி. நிறுவனத்தில் 4 -வது நாளாக நடந்த சோதனையில் கம்ப்யூட்டர், மடிக்கணிணி. ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்.

கோவை ஜூலை 10:

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார்.கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடந்தது. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப் டாப்பை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

கோவை பீளமேட்டில் கே.சி.பி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தின் இயக்குனராக சந்திரபிரகாஷ் உள்ளார். இங்கு வருமானவரித்துறை சோதனை நடந்தது. நேற்று 3-வது நாளாக கே.சி.பி.நிறுவனம், ஆலயம் அறக்கட்டளையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. கே.சி.பி. நிறுவனத்தில் 3-வது நாளாக நேற்று காலை தொடங்கிய சோதனையானது விடிய, விடிய நடந்தது.

அப்போது அங்கிருந்த பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் சந்திரபிரகாஷின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த சமயம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.பின்னர் வீடு திரும்பிய அவரிடம் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று 4-வது நாளாக பீளமேட்டில் உள்ள கே.சி.பி. நிறுவனம் மற்றும் கொடிசியா அருகே உள்ள சந்திபிரகாஷ் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றி கேள்விமேல் கேள்வி எழுப்பினர். அப்போது கே முன்னுக்கு பின் முரணான தகவலை பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் கம்ப்யூட்டர், மடிக்கணிணி. ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *