06.11.22:
தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாக  கொண்டாடும் தீபத் திருநாள் கார்த்திகை தீபம் .கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இது கொண்டாடப்படுகிறது.

click for live video

 கோவையில் உள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பேரூர் படித்துறையில் 1008 விளக்குகளை ஏற்றி படித்துறையை ஜொலிக்க செய்தனர்.கோவையில் முக்கிய ஆறாக விளங்க கூடிய நொய்யல் ஆறு முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில்  “நொய்யல்” என எழுத்து வடிவில் தீபங்களால் வடிவமைத்து  இருந்தனர்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கடந்த பல வருடங்களாக கோவை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை தூய்மைப்படுத்துவது, ஆற்றங்கரை பகுதிகளில் மரம் நடுவது போன்ற செயல்களை முன்னெடுத்து செய்து வருகின்றனர் .இது குறித்து பேசிய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், இந்த நொய்யல் ஆறு மிக முக்கியமான ஆறாக விளங்குவதாகவும் அடுத்த தலைமுறையினருக்கு இந்த ஆறு மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார்.

ஆறுகளை வழிப்படும் முறைகள் பழங்காலம் தொட்டே இருந்து வருவதால் கார்த்திகை தீபத்திருநாளில்   பேரூர் படித்துறையில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்த்திகை தீப விளக்குகளை ஏற்றி நொய்யல் ஆற்றை மக்கள் வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *