நாச்சிமுத்து கவுண்டர் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை  அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள்.

4-ம் நாள் (01.06.2022) போட்டி முடிவுகள். 
கோயம்புத்தூர், ஜுன் 1, 2022 : கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான 55 – வது ஆண்டு, ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 19 – வது ஆண்டு, பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. நான்காம் நாள் (01.06.2022) காலை 6.45 மணிக்கு நடைபெற்ற 55-வது நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவின் முதல் போட்டியில், புது தில்லி – இந்தியன் இரயில்வே அணியை எதிர்த்து தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் அணி விளையாடியது. இதில் இந்தியன் இரயில்வே அணி 75 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து கேரளா போலீஸ் அணி விளையாடியது. இதில் இந்திய கப்பல் படை அணி 67 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எதிர்த்து விளையாடிய கேரளா போலீஸ் அணி 36 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.

 மூன்றாவது போட்டியில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை எதிர்த்து கேரளா போலீஸ் அணி விளையாடியது. இதில் கேரளா போலீஸ் அணி 81 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எதிர்த்து விளையாடிய கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி 61 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.

 நான்காவது போட்டியில் திருவனந்தபுரம் – கேரளா மாநில மின்சார வாரியம் அணியை எதிர்த்து பெங்களூரு – பேங்க் ஆஃப் பரோடா அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரியம் அணி 82 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எதிர்த்து விளையாடிய பேங்க் ஆஃப் பரோடா  72 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.

ஐந்தாவது போட்டியில் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியை எதிர்த்து இந்திய விமானப் படை அணி விளையாடியது. இதில் இந்திய விமானப் படை அணி 89 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எதிர்த்து விளையாடிய ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணி 86 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.

 ஆறாவது போட்டியில் இந்தியன் இரயில்வேஸ் அணியை எதிர்த்து இந்திய கப்பல் படை அணி விளையாடியது. இதில் இந்திய கப்பல் படை அணி 85 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எதிர்த்து விளையாடிய இந்தியன் இரயில்வேஸ் அணி 82 புள்ளிகள் எடுத்து தோலிவியடைந்தது.  

 19வது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை பெண்கள் பிரிவு முதல் போட்டியில் தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணியை எதிர்த்து கிழக்கு இரயில்வே அணி விளையாடியது. இதில் கிழக்கு இரயில்வே அணி 55 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எதிர்த்து விளையாடிய  தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி 40 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.  

இரண்டாவது போட்டியில் கேரளா மாநில மின்சார வாரியம் அணியை எதிர்த்து தென் மேற்கு இரயில்வே அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரியம் அணி 64 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றது. எதிர்த்து விளையாடிய தென் மேற்கு இரயில்வே அணி 62 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.

(02.06.2022) நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டி ஆண்கள் பிரிவில் இந்தியன் இரயில்வே அணி, இந்திய கப்பல் படை அணி, கேரளா மாநில மின்சார வாரியம் அணி மற்றும் இந்திய விமானப்படை அணி ஆகிய அணிகள் தகுதி பெற்றன. 02.06.2022 அன்று  நடக்க இருக்கும் அரை இறுதி முதல் போட்டியில் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து கேரளா மாநில மின்சார வாரியம் அணி விளையாடுகின்றது. இரண்டாவது போட்டியில் இந்திய விமானப்படை அணியை எதிர்த்து இந்தியன் இரயில்வே அணி விளையாடுகின்றது. 
    
பெண்கள் பிரிவில் கிழக்கு இரயில்வே அணி, தென் மேற்கு இரயில்வே அணி, கேரளா மாநில மின்சார வாரியம் அணி மற்றும் கேரளா போலீஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இதில் முதல் போட்டியில் கேரளா மாநில மின்சார வாரியம் அணியை எதிர்த்து கேரளா போலீஸ் அணி விளையாடுகிறது. இரண்டாவது போட்டியில் கிழக்கு இரயில்வே அணியை எதிர்த்து தென் மேற்கு இரயில்வே அணி விளையாடுகிறது.

 (02.06.2022)  நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் ஜுன் 3 – ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.

                                                   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *