தமிழக வனத்துறையில் தனியார் ரோந்து பணி.முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அரசாணை.வனத்துறை அதிர்ச்சி.முதல்வருக்கு தெரியுமா?
26.12.21:
தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் 10.12.2021ஆம் தேதி இட்டு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி இருக்கக் கூடிய தனியார் நிலங்களில் ரோந்து செல்வதற்காக wildlife and nature conservation trust என்ற தனியார் அமைப்புக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இந்திய வனத்துறை வரலாற்றிலேயே வனத்துறையின் கடமையை செய்ய, இதுவரை யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. வனத்துறையில் வனக்காவலர்,வனவர், ரேஞ்சர், மாவட்ட வன அலுவலர், வேட்டை தடுப்பு காவலர்கள் என பல அதிகாரிகள் பணியில் இருக்கும்போது,சட்டவிரோதமாக தனியார் ட்ரஸ்டுக்கு ரோந்து பணியை கொடுப்பது சரிதானா என்பது குறித்து சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் wildlife and nature conservation trust நிர்வாகி சாதிக் அலி வன ஆர்வலர்களை செல்போனில் மிரட்டும் ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது.
watch video news in YouTube:coimbatore times

for video click link-Apply AFCAT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *