அந்தோணியார் ஆலய திருவிழா.மஞ்சுவிரட்டு போட்டிகள்.
சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழா மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு,தை 5ஆம் தேதி மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
கண்டிப்பட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. ஆலயத்தின் முன்பாக ஏராளமான பொதுமக்கள் பொங்கலிட்டு இந்த விழாவை கொண்டாடினர். பிள்ளை வரம் வேண்டி பெற்றவர்கள், தங்களது நேர்த்திக் கடனை தீர்க்கும் விதமாக கரும்புத் தொட்டிலில் வனத்து அந்தோனியார் ஆலயத்தை மூன்று முறை சுற்றி வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். பின்னர் கண்டிபட்டி மைதானத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.
புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் வழிபடவும் மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்கவும் ஆயிரக்கணக்கான அண்டை கிராம மக்கள் கண்டுப்பட்டியில் கூடுவார்கள். கிராம மக்கள் அவர்கள் வீடுகளிலே அன்பாக உபசரித்து விருந்து பரிமாறி அன்பை வெளிப்படுத்தினர். எந்தவித ஜாதி மத பேதமின்றி நடைபெறும் இந்த சமத்துவ விழா, ஒற்றுமையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. தங்களது கிராமத்திற்க்கு வருபவர்கள் பசியோடு செல்லக்கூடாது என்ற உயர்ந்த எண்னத்தில்,அன்பான உபசரிப்புடன், வந்தவர்களுக்கு விருந்து படைத்து ஊர் மக்கள் மகிழ்கின்றனர்.
தமிழர்களின் திருநாளாம் தைப்பொங்கல் முன்னிட்டு,தை ஐந்தாம் தேதி கண்டிப்பட்டி புகழ்பெற்ற மஞ்சுவிரட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும். தங்கள் வீடுகளில் காளைகளை வளர்ப்போர் அதற்கு சிறப்பு அலங்காரம், பூஜை செய்து ஊர்வலமாக கண்டிபட்டி மைதானத்திற்கு அழைத்து வருவார்கள். பிற கிராமங்களிலிருந்தும் வாகனத்தில் காளைகள் கொண்டுவரப்படும் .கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டு நடக்கும் மைதானத்தில் காளைகளை திறந்தவெளியில் மூக்கணாங்கயிறு கழற்றி விடப்படும். சீறிப்பாயும் காளைகளை அடக்க இளைஞர்கள் பலர் முன்வருவர். மஞ்சுவிரட்டு போட்டியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டாலும், அமைதியான முறையில் விழா நிறைவு பெற்றது.