நிலவின் தென் துருவம் அருகே சென்ற முதல் நாடு என்ற  வரலாற்றுச் சாதனை செய்துள்ளது இந்தியா. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள  ஏவுதளத்தில் இருந்து LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலத்தை ,கடந்து ஜூலை 14ஆம் தேதி இஸ்ரோ அனுப்பி வைத்தது. சந்திராயன் ஆகஸ்ட் 23  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
    சந்திராயன் விக்ரம் லேண்டர், நிலவின் தென்பகுதியில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும். லேண்டர் தரையிறங்கியதும் இரண்டு மணி நேரத்திற்கு  ஏற்படும் புழுதியால், அப்பகுதி முழுவதும் மங்கலாக இருக்கும். அதன் பின்பு விக்ரம் லேண்டரில்  இருந்து பிரக்யான்  ரோவர் ,வெளியே வந்து நிலவில் கால் பதித்து,  நிலவில் இறங்கி இஸ்ரோவின் லோகோ மற்றும் இந்திய தேசிய சின்னத்தையும் நிலவில் பதிக்கும். நிலவில் காற்று இல்லை. எனவே இந்த அடையாளம் எப்பொழுது இருக்கும்.
    சந்திரனின் ஒரு நாள் என்பது  14 நாட்களுக்கு பகல் மற்றும் 14 நாட்களுக்கு இரவு நிலவும். இதில் 14 நாட்களுக்கு பகல் நீடிக்கும் காலகட்டத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது.  26 கிலோ எடை கொண்ட ரோவரில்  இணைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சென்சார், ஆண்ட்டனாக்கள் மூலம் தகவல்கள் பெறப்படும்.பிரக்யான்  ரோவர், ரோபோ போன்றது. ஆறு சக்கரம், சோலார் பேனல் கேமரா இருக்கும். 500 மீட்டர் சுற்றளவுக்கு நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வில் ஈடுபடும்.
    நிலாவின் தரைப்பரப்பில்  என்னென்ன தனிமங்கள், நீர், பனிக்கட்டி உள்ளதா ?நிலவின் வளிமண்டலம் பற்றி ஆய்வு செய்து பூமிக்கு அனுப்பும்.பிரக்யான் ரோவர் நிலவின் மண்ணை குடைந்து ,   லேசர் வாயிலாக உடைத்து என்ன தனிமங்கள் உள்ளன என்பதை பற்றி ஆய்வு செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *